பக்கங்கள்

திங்கள், 28 ஏப்ரல், 2014

China Wall

ஷி ஹூவாங்டி அரசரும், சீனப் பெருஞ்சுவர் உருவான வரலாறும்

உலக அதிசயங்களில் ஒரே ஒரு அதிசயத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. விண்ணிலிருந்து பார்த்தால்கூட அந்த அதிசயம் கண்களுக்கு தெரியும் என்பதுதான் அந்த சிறப்பு.

சீன வரைபடத்தில் இயற்கையே வரைந்த கோடுபோல் சுமார் 7500 கிலோமீட்டர் பரந்து விரிந்து கிடக்கும் சீனப் பெருஞ்சுவர்தான் அந்த சிறப்பைப் பெற்ற ஒரே உலக அதிசயம்.இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது,

இது யாலுநதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 லிருந்து 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. பெருஞ்சுவரின் நீளம் முழுவதும் இருந்த படையினருக்கு இடையேயான தகவல் தொடர்புகளும், தேவையான போது கூடுதல் படைகளை அழைப்பதற்கான வசதிகளும், எதிரிகளின் நகர்வுகள் குறித்து, பாசறைகளில் இருந்த படைகளை எச்சரிக்க வேண்டியதும் முக்கியமான தேவைகள். இதனால், மலை முகடுகளிலும், சுவர்ப் பகுதிகளில் அமைந்த பிற உயரமான பகுதிகளிலும், சமிக்ஞைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நமக்கு பிரமிப்பூட்டும் அந்த நீள் சுவர் உருவாவதற்கு காரணமாக இருந்த சீன தேசத்துப் பெருமன்னனைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். சீனப் பெருஞ்சுவரை மட்டுமல்ல பல சிற்றரசுகளாக சிதறிக் கிடந்த சீனப் பெருநிலத்தை ஒருங்கினைத்து ஒன்றுபட்ட சீனாவாகவும் உலகுக்குத் தந்த அந்த மன்னனின் பெயர் ஷி ஹூவாங்டி (Shi Huangdi).

உலக வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னனின் முக்கியத்துவத்தை நாம் முழுமையாக அறிய வேண்டுமென்றால் சீனாவின் வரலாற்றுப் பின்னனியை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். கி.மு 259-ஆம் ஆண்டு சீனாவில் பிறந்தார் ஷி ஹூவாங்டி. அவர் பிறப்பதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவை Zhao மன்னர்கள் ஆண்டு வந்தனர். ஆயிரம் ஆண்டு காலமாக நடந்த அந்த மன்னர்களின் ஆட்சி சிறிது சிறிதாக வலுகுன்றி சீனா நிறைய சிற்றரசுகளாக சிதறுண்டு கிடந்தது. சிற்றரசர்கள் அடிக்கடி தங்களுக்குள்ளாகவே போரிட்டு வந்தனர். அதன் காரணமாக சில சிற்றரசுகள் இருந்த இடம் தெரியாமல் போயின. அனைத்து சிற்றரசுகளிலும் பலம் பொருந்தியதாக விளங்கியது சின் (Qin) அரசு. அந்த அரச வம்சத்தில்தான் பிறந்தவர்தான் செங் (Zheng) என்ற ஷி ஹூவாங்டி.

ஷி ஹூவாங்டி பதின்மூன்றாவது வயதிலேயே அரியனை ஏறினார். ஆனால் 21-ஆவது வயதில்தான் ஆட்சியின் முழு அதிகாரமும் அவர் கைகளுக்கு வந்தது. மிகச்சிறந்த அறிவாளியாக இருந்த இளவரசர் செங் தகுதி வாய்ந்த தளபதிகளை தேர்ந்தெடுத்து தன் படை வலிமையைப் பெருக்கினார். ஏற்கனவே வலிமை குன்றியிருந்த எஞ்சிய சிற்றரசுகள் மீது படையெடுத்து அவற்றை ஒவ்வொன்றாக கைப்பற்றத் தொடங்கினார். சீனாவின் கடைசி சிற்றரசு கி.மு.221-ஆம் ஆண்டு அவர் வசமாகி ஒட்டுமொத்த சீனாவும் அவரது ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது அவருக்கு வயது 38-தான் ஆனது. அந்த சமயத்தில் அவர் தனக்கு சூட்டிக்கொண்ட பெயர்தான் ஷி ஹூவாங்டி 'முதல் பேரரசர்' என்பது அதன் பொருள். ஒட்டுமொத்த சீனாவும் தனது ஆளுமையின் கீழ் வந்ததும் அவர் உடனடியாக பல அதிரடி மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செயல்படுத்தத் தொடங்கினார்.

ஒற்றுமையின்மைதான் சீனா சிதறுண்டு கிடந்ததற்கு காரணம் என்பதை உணர்ந்த அவர் 'பியூடல் சிஸ்டம்' எனப்படும் பிரபுத்துவ அரசு முறையை முற்றாக ஒழித்தார். சீனாவை மொத்தம் 36 மாநிலங்களாக பிரித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரை நியமித்தார். அதுமட்டுமல்ல ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆளுநராக இருந்த முறையையும் ஒழித்தார். ஆளுநர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதையும், அதிக செல்வாக்கை உருவாக்கிக் கொள்வதையும் தவிர்க்க அவர்களை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு மாநிலமாக மாற்றினார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரோடு ஓர் இராணுவ தலைவரையும் நியமித்தார். அனைவருமே மன்னரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டவர்கள்தான்.
அவர் அறிமுகம் செய்த அந்த மாற்றங்களால் சீனா ஒற்றுமை உணர்வோடு வலுப்பெறத் தொடங்கியது. நாடு முழுவதும் நல்ல சாலைகள் அமைக்கப்பட்டன. எந்த மாநிலத்திலாவது கலகமோ, உட்பூசலோ நேர்ந்தால் உடனடியாக அந்தப் பகுதிக்கு மத்திய அரசின் இராணுவத்தை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அரசியல் மற்றும் இராணுவ மாற்றங்களோடு வர்த்தகத்திலும் மாற்றங்களை கொண்டு வந்தார் ஷி ஹூவாங்டி. பொருட்களை அளக்கும் கருவிகளையும், அளவை முறைகளையும் ஒருங்கினைத்தார். நாடு முழுவதும் பொதுவான நாணய முறையை அறிமுகப்படுத்தினார். சாலைகள் மற்றும் கால்வாய்களின் கட்டுமானத்தை நேரடியாக மேற்பார்வையிட்டார். சீனா முழுவதற்கும் ஒருங்கினைந்த சட்டத்தை அறிமுகம் செய்ததோடு எழுத்து வடிவத்தையும் சீராக்கினார்.

இவ்வுளவு சிறப்பான செயல்களை செய்தும், வரலாற்றின் பழிச்சொல்லை சம்பாதிக்கும் ஒரு செயலையும் செய்தார் ஷி ஹூவாங்டி. கி.மு 213-ஆம் ஆண்டு அவர் வேளாண்மை, மருத்துவம் போன்ற முக்கியத்துறை சம்பந்தபட்டவற்றை தவிர்த்து சீனாவில் உள்ள மற்ற நூல்கள் அனைத்தையும் எரித்துவிடும்படி கட்டளையிட்டார். அதற்கு ஒரு முக்கிய காரணம் 'கன்பூசியஸ் சித்தாந்தம்' உட்பட போட்டி சித்தாங்கள் அனைத்தையும் அவர் அழிக்க நினைத்துதான். ஆனால் எல்லா நூல்களையும் அழித்துவிடாமல் தடை செய்யப்பட்ட நூல்களின் சில பிரதிகளை அரசவை நூலகத்தில் வைக்குமாறு உத்தரவிட்டார். சீனாவின் தென்பகுதியில் படையெடுத்து பல பகுதிகளை கைப்பற்றி சீனாவுடன் இணைத்துக்கொண்டார் ஷி ஹுவாங்டி.

வடக்கிலும், மேற்கிலும் பல பகுதிகளை கைப்பற்றினாலும் அந்தப் பகுதிகளை முழுமையாக அவரது ஆட்சிக்கு கீழ் கொண்டு வர முடியவில்லை. Zhao மன்னர்கள் ஆட்சிக்காலத்திலேயே வடக்குப் பிரதேசங்களிலிருந்து சீனாவுக்குள் அடிக்கடி நுழைந்து தாக்குதல்களை நடத்தி வந்தனர் சிங் நு (Xiongnu) இன மக்கள். அந்த தாக்குதலை தடுத்து நிறுத்த சீன எல்லை நெடுகிலும் சிறிய, சிறிய சுவர்களை அமைக்கத் தொடங்கினர் சீனர்கள். அப்படி சிறு சிறு சுவர்களாக இருந்ததை இணைத்து ஷி ஹூவாங்டி அமைக்கத் தொடங்கியதுதான் மிக நீண்ட சீனப் பெருஞ்சுவர் ஆனது. சீனப் பெருஞ்சுவரை கட்டுவதற்காகவும், போர் செலவுகளுக்காகவும் பொதுமக்கள் மீது கடுமையான வரிகளை விதித்தார் ஷி ஹூவாங்டி. அதனால் அவரை மக்கள் வெறுக்கத் தொடங்கினர். அவர் மீது கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் அவற்றுக்கெல்லாம் ஈடுகொடுத்து வந்த ஷி ஹூவாங்டி கி.மு.210-ஆம் ஆண்டில் தனது 49-ஆவது வயதில் இயற்கையாகவே காலமானார். அவர் கல்லைறையைச் சுற்றி மிக விமரிசையாக ஆறாயிரம் டெரகோட்டா (Terracotta Army) களிமண் வீரர்களின் சிற்பங்கள் புதைக்கப்பட்டன. மரணத்திற்கு பிறகும் அவருக்கு சேவை புரிய அந்த சிற்பங்கள் உதவும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்யப்பட்டது.

சீன வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. அவர் மறைந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் அவர் உருவாக்கித்தந்த அரசாட்சி முறையும், சட்ட முறையும்தான் நவீன சீனாவுக்கு அடிப்படையாக விளங்குகின்றன. மன்னன் ஷி ஹூவாங்டியின் 'சின்' பேரரசின் ஆட்சி பலம் பொருந்தியதாக இருந்ததால்தான் அதன் பெயரிலேயே அந்த தேசம் சீனா என்றழைக்கப்படுகிறது. புத்தகங்களை எரித்ததிலும், போட்டி சித்தாந்தங்களை அழிக்க நினைத்ததிலும் மன்னன் ஷி ஹூவாங்டி தவறு செய்திருந்தாலும், சீன வரலாற்றில் அவரது ஒட்டுமொத்த பங்களிப்பை எவராலும் மறுக்க முடியாது.

பாதுகாப்புக்காகவும், எதிரிகளை அண்ட விடாமல் தடுப்பதற்காகவும் கட்டப்படத் தொடங்கிய ஓர் உன்னத கட்டுமான அதிசயம்தான் சீனப் பெருஞ்சுவர். இன்றும் சீனாவின் செல்வாக்கை அது உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த உலக அதிசயத்தையும், அதற்கு ஒத்த ஓர் அதிசய ஆட்சி முறையையும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வழங்க மன்னன் ஷி ஹூவாங்டிற்கு உறுதுணையாக இருந்த பண்புகள் ஆராய்ந்து முடிவு எடுக்கும் அறிவும், முடிவெடுத்து அதனை அச்சமின்றி செயல்படுத்தும் திறனும், எதிரிகளை திணறடிக்கும் தைரியமும், ஒற்றுமையே பலம் என்ற அவரது நம்பிக்கையும்தான்.

ஆனால் இதற்காக அவர் தன் மக்களிடம் சிறந்த அரசன் என்ற நன்மதிப்பை இழக்கவேண்டியதாயிற்று.

சீன பெருஞ்சுவரின் தற்போதைய நிலை 

பெய்ஜிங்குக்கு வடக்கே சுற்றுலா மையங்களுக்கு அண்மையில் உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்டும், சில வேளைகளில் மீளமைப்புச் செய்யப்பட்டும் இருந்தாலும் ஏனைய இடங்களில் சுவர் நல்ல நிலையில் இல்லை.
சில இடங்களில் இது ஊர் விளையாட்டு இடங்களாகவும், இன்னும் சில இடங்களில், சுவரின் சில பகுதிகளில் சுலோகங்களும் எழுதப்படுகின்றன.
கட்டுமானத் திட்டங்களின்போது குறுக்கேயிருந்தமையால் சில பகுதிகள் இடித்துத் தள்ளப்பட்டுமுள்ளன.

சீனப் பெருஞ் சுவர்ச் சங்கம் சுவரைப் பாதுகாப்பது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஜூன் 2003 வரை சீன அரசாங்கம் சுவர்ப் பாதுகாப்புக்கான எந்தச் சட்டத்தையும் உருவாக்கவில்லை. விரிவான ஆய்வுகள் எதுவும் செய்யப்படாததால் இச்சுவரின் எவ்வளவு பகுதி எஞ்சியுள்ளது என்று கூறமுடியாதுள்ளது.
குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் இச் சுவரின் நிலை பற்றிக் கூறுவது கடினமானது. கான்சு மாகாணத்திலுள்ள 60கிலோமீட்டர் நீளமான இச் சுவரின் பகுதி, மணற்புயலினால் ஏற்படும் அரிப்பினால் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் அழிந்துவிடக்கூடும் என அஞ்சப்படுகின்றது

செவ்வாய், 11 மார்ச், 2014

KIDNEY NEWS

சிறுநீரகங்கள் குறித்த தகவல்களை தமிழில் அளிக்கும் இணையதளம் தொடக்கம்

மனித சிறுநீரகங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் தமிழில் தரும் இணையதளம் எழும்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

கிட்னி ஃபவுன்டேஷன் சார்பில் வடிவமைக்கப்பட்ட இந்த இணையதளத்தை, சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் சிறுநீரகவியல் நிபுணர் பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார். இது குறித்து கிட்னி ஃபவுன்டேஷனை சேர்ந்த யுகேந்தர் கூறியதாவது:
நம் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகங்கள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்று அல்லாத நோய்களால் பாதிக்கப்படுகின்றன.
இந்த நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிறுநீரங்களின் முக்கித்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது.
இதை கருத்தில் கொண்டு, ஜ்ஜ்ஜ்.ந்ண்க்ய்ங்ஹ்ண்ய்பஹம்ண்ப்.ஸ்ரீர்ம் என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில், சிறுநீரகங்களின் முக்கியத்துவம், செயல்பாடு, அவற்றை பாதுகாக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள், அதை உறுதிசெய்வதற்கான பரிசோதனைகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட மனித சிறுநீரகங்கள் குறித்த அனைத்து தகவல்களும் தமிழில் இடம் பெற்றுள்ளன.
தேவைப்படுவோர் இந்த தகவல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். சிறுநீரகங்கள் பற்றிய தகவல்களை ஆங்கிலத்தில் அளிக்கும் ஜ்ஜ்ஜ்.ந்ண்க்ய்ங்ஹ்உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்.ஸ்ரீர்ம் என்ற இணையத்தளம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது என்றார் அவர்.

SSLC PRIVATE HALL TICKET

10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள்: இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) முதல், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.அறிவியல் பாடத் தேர்வு எழுதுவோர் செய்முறைத் தேர்வு நடைபெறும் நாள் குறித்த விவரத்தை, ஏற்கெனவே செய்முறை பயிற்சி பெற்ற பள்ளித் தலைமையாசிரியரிடம் மார்ச் 17-ஆம் தேதி அறிந்து கொள்ளலாம்.
செய்முறைத் தேர்வுகளை மார்ச் 18 முதல் 23-ஆம் தேதி வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

SCIENCE DAY

இன்று தேசிய அறிவியல் தினம்

அறிவியல் இந்த ஒற்றை வார்த்தையில் தான் உலகமே அடங்கியிருக்கிறது. நமது அன்றாட நடவடிக்கைகள், ஒவ்வொன்றிலும் அறிவியல் மறைந்திருக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், "ராமன் விளைவு' என்ற ஒளி சிதறல் நிகழ்வை 1928 பிப்., 28ம் தேதி கண்டுபிடித்தார். "நீர், காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து, அலை நீளம் மாறுகிறது. அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம் தண்ணீரில் தோன்றுகிறது' என்பதை கண்டுபிடித்தார். இந்த நாளே இந்தியாவில் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

எல்லாம் அறிவியலின் பயன்: இருளை விரட்டிய மின்விளக்கு, தூரத்தில் இருந்தாலும் உரையாட தொலைபேசி, என்ன வேலைகளையும் செய்வதற்கு கம்ப்யூட்டர், மரங்களில் நிழல்களை தங்கிய மனிதனுக்கு உயர்ந்து நிற்கும் வானளாவிய கட்டடங்கள், எங்கு வேண்டுமானாலும் செல்ல விரும்பிய மனிதன் கடலுக்கு நடுவே கூட பாலங்களை அமைத்தது; காலால் நடந்த மனிதன் கால்மணி நேரத்தில் வேறு நாட்டிற்கே (வாகனங்கள்) செல்கிறான். வெள்ளத்தில் இருந்த பாதுகாத்துக்கொள்ள அணைகள், மேலே இருந்து தகவல்களை தருவதற்கு சாட்டிலைட், அறிவியல் ரீதியாக சந்ததியை கண்டுபிடிக்க மரபணு, இலை தழைகளை உடுத்திய மனிதன் தற்போது பல வண்ணங்களில் வடிவங்களில் ஆடைகளை உடுத்துகிறான். பச்சை காய்கறிகளையும், பச்சை மாமிசங்களையும் சாப்பிட்ட மனிதன்; தற்போது உணவை தேர்வு செய்ய நீண்ட பட்டியலை பார்க்கிறான். இதற்கு காரணம் அறிவியல் தான். 

இரண்டும் கலந்ததே:

எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பிலும் நன்மை, தீமை சேர்ந்தே இருக்கும். அதற்காக அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு தடை விதிக்கக் கூடாது. அறிவியலை ஆக்கப்பூர்வ விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு காலத்தில் "அணுகுண்டால்' உருக்குலைந்த ஜப்பான், இன்று அதே அணுசக்தியால் முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கு காரணம் அந்நாட்டின் விஞ்ஞானிகள். நமது நாட்டிலும் மாணவர்கள் வெறும் புத்தக அறிவோடு நின்று கொள்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும். அறிவியல் ஆர்வத்தை பள்ளி மாணவர்களிடம் இருந்து ஏற்படுத்த வேண்டும். இதற்கு அறிவியல் பாடப்புத்தகத்தில் தியரியுடன், செய்முறைப்பயிற்சியையும் இணைக்க வேண்டும். செய்முறைக்குத் தேவையான அறிவியல் ஆய்வு உபகரணங்கள் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். 

சனி, 22 பிப்ரவரி, 2014

MOBILE - ORIGINAL ?

செல்போன் ஒரிஜினல்தானா..?!

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?! கண்டுபிடிப்பது எப்படி..?!
நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.

சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?
உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.
இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.
முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?
சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும். உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள்...உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள்.
இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும். அப்படி வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இணையத்தின் மூலமும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr
என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்துவைத்துக்கொண்ட IMEI எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.
குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும்.
உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறிய முடியும்.
அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள்
1. 0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம் குறைந்ததாக இருக்கும்.
2. 0,8 அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும்,தரமானதாகவும் இருக்கும்.
3. 0,1 அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும்.
4. 1,3 என இருப்பின் Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும்,தரம் குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

RAIN - READYMADE

வறட்சியை சமாளிக்க செயற்கை மழை:

மதுரை மாநகரில் நிலவும் வறட்சியை சமாளிக்க செயற்கை மழை வரவழைப்பது பற்றி யோசித்து வருவதாக மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சியின் கூட்டம்
மேயர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையர் சி.கதிரவன் முன்னிலை வகித்தார். இதில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தனியார் லாரிகள் மூலம் நீர் விநியோகிக்க ரூ.2.69 கோடி, 500 ஆழ்துளை கிணறுகள் அமைக்க ரூ.13.87 கோடியை பொது நிதியிலிருந்து செலவிட ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதுபோல் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
அதன்பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் செல்லம் பேசுகையில், தற்போது 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருகிறது. மேட்டு பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். மேயர் பதிலளித்து பேசுகையில், ’99 சதவீதம் பகுதிகளுக்கு வேகமான குடிநீர் வழங்கப்படுகிறது. மேடான பகுதி அமைந்துள்ள 1 சதவீதம் பேருக்கும் போதுமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
அதிமுக கவுன்சிலர் கேசவ பாண்டியம்மாள் பேசுகையில், ‘மழை இல்லாததால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுனமாக இருந்து மழைக்காக வேண்டுதல் செய்ய வேண்டும். முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் ஏற்பாடாக இதற்கு மேயர் அனுமதி தர வேண்டும்’ என்றார்.
இதைக்கேட்ட மேயர் அதிர்ச்சியடைந்து ‘அதையெல்லாம் வெளில வைச்சுக்கலாம். இங்க வழிபாடு நடத்தக்கூடாது’ எனக் கூறி அனுமதி மறுத்தார். அதன்பின்னரும் கேசவபாண்டியம்மாள் விடாப்பிடியாக கேட்டதால், ‘மார்ச், ஏப்ரலில் மழை வந்து விடும். நம்பிக்கையோடு அமருங்கள்’ எனக்கூறி மேயர் சமாதானப்படுத்தி உட்கார வைத்தார்.
கவுன்சிலர் தாஸ் பேசுகையில், மழை இல்லாததால் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது சிரமமாக உள்ளது. கர்நாடகாவில் ரூ.1000 கோடி செலவு செய்து மழைக்காக யாகம் நடத்தியுள்ளனர். அதுபோல் நாமும் மழைக்காக யாகம் வளர்க்க வேண்டும்’ என்றார். அதற்கு பதிலளித்த மேயர் ‘யாகம் என்பது தனிப்பட்ட நம்பிக்கை. அதை மாநகராட்சியால் செய்ய முடியாது. அதற்கு பதில் வறட்சியை சமாளிக்க செயற்கை மழை வரவழைப்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார்.
கிரண்குராலா இருளா?
சுகாதாரக்குழு தலைவர் முனியாண்டி உள்பட பல கவுன்சிலர்கள் பேசும்போது இதற்கு முன் ஆணையராக இருந்த கிரண்குராலாவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து பேசினர். அப்போது கிரண்குராலாவால் கடந்த 3 மாதமாக மாநகராட்சியே இருண்டு கிடந்ததாகவும், புதிய ஆணையராக வந்துள்ள சி.கதிரவனால் இனி இருளிலிருந்து மீண்டு ஒளிகிடைக்கப் போவதாகவும் அனைவரும் சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரியான கருத்தையே பதிவு செய்தன

WATER - NEWS

தண்ணீர்!!!

பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீர் நமது உணவின் மிக முக்கியமான அம்சம். இத்தகைய தண்ணீரின் பங்களிப்பு நமது முன்னோர்களின் வாழ்வில் எத்தகைய இடத்தினை
கொண்டிருந்தது என்பதை இன்று பார்ப்போம். நமது உடலின் 65 விழுக்காடு நீர் மற்றும் நீர்மங்களினால் ஆனது என்கிறது நவீன அறிவியல். நாம் சாதாரணமாய் நினைக்கும் தண்ணீர் இல்லாத வாழ்க்கையை ஒரு நொடிகூட கற்பனை கூட செய்யமுடியாது. அந்த அளவிற்கு நீர் நமது வாழ்வின் இன்றியமையாத பொருள். நம் உடலில் பித்த நீர், கணைய நீர், இரைப்பை நீர், உமிழ் நீர், வியர்வை நீர், இரத்தத்தின் ஊடகமான நீர், சிறு நீர், கண்ணீர், காதுத் திரவம் எனப் பலவகையான நீர்மங்கள் உள்ளன. நாம் அருந்தும் குடிநீர்தான் இத்தகைய நீர்மங்களாய் மாறி உடலை இயக்குகிறது. தண்ணீர் இல்லாமல் சமைக்கப்படும் உணவினை குடல் ஏற்பதில்லை. தண்ணீரானது எதனுடனும் சேர்ந்து வினையாற்றும் தன்மையுடையது. பஞ்ச பூதஙக்ளின் மற்ற நான்கு கூறுகளுடன் தண்ணீர் சேரும்போது தன் ஆற்றலை வெளியிடுகிறது.
பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீர் நமது உணவின் மிக முக்கியமான அம்சம். இத்தகைய தண்ணீரின் பங்களிப்பு நமது முன்னோர்களின் வாழ்வில் எத்தகைய இடத்தினை கொண்டிருந்தது என்பதை இன்று பார்ப்போம். நமது உடலின் 65 விழுக்காடு நீர் மற்றும் நீர்மங்களினால் ஆனது என்கிறது நவீன அறிவியல். நாம் சாதாரணமாய் நினைக்கும் தண்ணீர் இல்லாத வாழ்க்கையை ஒரு நொடிகூட கற்பனை கூட செய்யமுடியாது. அந்த அளவிற்கு நீர் நமது வாழ்வின் இன்றியமையாத பொருள்.

நம் உடலில் பித்த நீர், கணைய நீர், இரைப்பை நீர், உமிழ் நீர், வியர்வை நீர், இரத்தத்தின் ஊடகமான நீர், சிறு நீர், கண்ணீர், காதுத் திரவம் எனப் பலவகையான நீர்மங்கள் உள்ளன. நாம் அருந்தும் குடிநீர்தான் இத்தகைய நீர்மங்களாய் மாறி உடலை இயக்குகிறது. தண்ணீர் இல்லாமல் சமைக்கப்படும் உணவினை குடல் ஏற்பதில்லை.

தண்ணீரானது எதனுடனும் சேர்ந்து வினையாற்றும் தன்மையுடையது. பஞ்ச பூதஙக்ளின் மற்ற நான்கு கூறுகளுடன் தண்ணீர் சேரும்போது தன் ஆற்றலை வெளியிடுகிறது

NEW ACID LIQUIED

புதிய ரசாயன திரவம் இந்திய டாக்டர் கண்டுபிடித்து சாதனை

உடல் உறுப்புகளை ஒரு வாரம் பாதுகாத்து வைக்க உதவும் புதிய ரசாயன திரவம் ஒன்றை இந்திய டாக்டர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தாதர்
பகுதியில் பிறந்தவர் ஹேமந்த் தாட்டே. இப்போது, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். இவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தானமாக பெறும் உறுப்புகளை பாதுகாத்து வைப்பது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். தற்போது இதில் அவருக்கு வெற்றி கிட்டியுள்ளது. கடந்த 20 ஆண்டு கால முயற்சியின் பலனாக தற்போது சோமா என்ற புதிய ரசாயன கலவையை டாக்டர் ஹேமந்த் கண்டுபிடித்துள்ளார்.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது. தானமாக பெறப்படும் உறுப்புகளை சில மணி நேரங்களில் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு பொருத்தி விட வேண்டும். அப்படி செய்யாவிட்டால் உடல் உறுப்புகள் செயலிழந்து விடும். விபத்துகளில் உயிரிழந்தோர், மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குகின்றனர். அந்த உறுப்புகளை சரியான நேரத்தில் நோயாளிகளுக்கு பொருத்த முடிவதில்லை. இதனால் உறுப்புகள் தானமாக கிடைத்துள்ள நோயாளிகளுக்கு பலன் இல்லாமல் போய் விடுகிறது. இந்த பிரச்னைக்கு டாக்டர் ஹேமந்த் கண்டுபிடித்துள்ள புதிய ரசாயன கலவை தீர்வாக அமைந்துள்ளது.

தானமாக பெறப்படும் உறுப்புகளை ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை 'சோமா' ரசாயன கலவையில் பாதுகாத்து வைக்க முடியும். தற்போது இருதயம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளையும் புதிய கண்டுபிடிப்பான சோமா என்ற திரவத்தில் வைத்து பாதுகாக்கலாம். உறுப்புகளை தானமாக பெற்றவுடன் நோயாளிக்கு பொருத்த வேண்டிய நிர்பந்தம் இருக்காது. இந்த புதிய ரசாயனம் ஒரு வாரம் வரை உறுப்புகளை பாதிப்பில்லாமல், திசுக்கள் அழியாமல் அதே நிலையில் வைக்கும். சாதாரண வெப்ப நிலையிலேயே இந்த ரசாயனத்தில் உறுப்புகளை போட்டு வைக்கலாம்.

இதுகுறித்து டாக்டர் ஹேமந்த் கூறுகையில், Ôகடந்த 20 ஆண்டு ஆராய்ச்சியின் பலனாக 21 ரசாயன கலவைகளை உள்ளடக்கிய புதிய சோமா என்ற திரவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூளை சாவு அடைந்த ஒருவரது உறுப்புகளில் இருதயம், நுரையீரல் உள்ளிட்டவற்றை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 4 முதல் 6 மணி நேரத்துக்குள், சிறுநீரகத்தை 24 மணி நேரத்துக்குள் பொருத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அது முடியாத பட்சத்தில் உறுப்புகள் பயனற்றதாகி விடுகின்றன. இந்த பிரச்னையை தீர்க்க புதிய ரசாயன கலவை பயன்படும். இதன் மூலம் ஒரு இடத்தில் இருந்து நீண்ட தூரம் எடுத்து சென்று உறுப்புகளை மற்றவர்களுக்கு பொருத்துவது எளிது. பன்றிகளின் உறுப்புகளை புதிய சோமா திரவத்தில் வைத்து பரிசோதித்ததில் வெற்றி கிட்டியுள்ளது. இது விரைவில் பயன்பாட் டுக்கு வர உள்ளது. இவ்வாறு டாக்டர் ஹேமந்த் கூறியுள்ளார். இவருடைய கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ANTARTIKA - NEWS

அண்டார்டிக்கா பற்றிய சில விசித்திர உண்மைகள்

♥இந்த உலகில் உரிமை கொண்டாடப்படாத ஒரே கண்டம் அண்டார்டிக்கா மட்டுமே .
♥உலகில் உள்ள 90 சதவிகிதம் [90%] பனி
அன்டார்டிகாவை மூடியுள்ளது .

♥உலகில் உள்ள மொத்த குடிநீரில் அண்டார்டிகாவில்மட்டும் 70 % பனியாக உறைந்து உள்ளது .

♥அடுத்து நான் கூறும் உண்மை உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் : "அண்டார்டிக்கா ஒரு பாலைவனம் !!!"

♥ஒவ்வொரு வருடமும் இரண்டு இன்ச் [2 inch] அளவிற்கு பனி கூடும் .

♥என்னதான் முழுவதும் பனியால் மூடி இருந்தாலும் , அண்டார்டிகா தான் உலகில் மிகவும் வறண்டு போன இடம் !

♥அண்டார்டிகாவின் முழு ஈரப்பதம் "கோபி பாலைவனத்தையும் [GOBI DESERT]" விட மிகவும் குறைவு

POCKET FOOD DANGER

பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் உணவுகள் தரும் தீங்கு குறித்து ஆய்வில் தகவல்

இங்கிலாந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளை அதிகம் எடுத்து கொண்டால் அது ஆபத்தை விளைவிக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.  இது குறித்து சுற்று சூழல் ஆய்வாளர்கள் 
விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கையில், உணவு பொருட்களை பேக்கிங் செய்யும்போது, பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு மற்றும் அதனை பதப்படுத்துவதற்கு உதவும் வேதி பொருட்கள் நீண்ட நாள் பயன்பாட்டில் மனித உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிவித்துள்ளனர்.
உணவை கெட்டு போகாமல் வைத்திருக்க சேர்க்கப்படும் பார்மால்டிஹைடு என்ற வேதி பொருள் புற்றுநோய் உருவாக்கும் தன்மை கொண்டது.  இந்த பார்மால்டிஹைடு அனைத்து இடங்களிலும் பரவலாக உள்ளது.  தாகத்தை தணிப்பதற்காக குடிக்கும் குளிர்பானங்களை சேமிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் சாப்பாட்டு மேஜையில் உள்ள தட்டுகள் போன்ற பொருட்களில் பார்மால்டிஹைடு வேதி பொருள் சிறிய அளவில் சேர்க்கப்படுகிறது.
இரண்டாவதாக, மனிதனின் ஹார்மோன் உற்பத்தியில் பைஸ்பீனால் ஏ, டிரைபியூட்டைல்டின், டிரைகுளோசன் மற்றும் தாலேட்டுகள் ஆகிய வேதி பொருட்கள் உணவு பொருள் பாதுகாப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
மூன்றாவதாக, உணவை பாதுகாக்கும் வேதி பொருட்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும்.  தற்போது உணவு பொருட்கள் பேக்கிங் செய்யப்படுவது என்பது அதிகரித்து வரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வு விரைவாகவும் மற்றும் நம்பகதன்மையுடனும் அதிக பயன்பாட்டை கொண்டிருக்கும் மக்களிடம் சென்று சேர வேண்டியது அவசியம் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, சுகாதாரம் என்ற பெயரில் பாதுகாக்கப்பட்ட உணவு பொருட்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்ப்பது நலம் என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

ELECTRICITY FROM COACHROACH

கரப்பான் பூச்சிகளின் மூலம் மின்சாரம்! ஜப்பானில் சாதனை

கரப்பான் பூச்சிகளை வைத்து ஜப்பான் பல்கலைகழக மாணவர்கள் புதுவித சென்சார்களை உருவாக்கியுள்ளனர்.கரப்பான் பூச்சிக்கு இரு மீசைகள் இருக்கும், அதாவது இவைகளை உணர் உறுப்புகள்(Antennae) என்று அழைக்கின்றனர்.இதன் மூலம் முன்புறத்தில் ஏதேனும் தடை 
உள்ளதாக என அறிந்து கொள்ளும். இதே போல கரப்பான் பூச்சியின் பின்புறத்தில் வேறு வித உணர் உறுப்புகள்(cerci) உள்ளன, பின்புறத்திலிருந்து தன்னைப் பிடிக்க ஏதேனும் வருகிறதா என்பதை இந்த உறுப்புகள் கண்டறிந்துதெரிவிக்கும்.இதனைகொண்டுஜப்பானின் ஒசாகா பல்கலைகழகம் புதுவித சென்சார்களை உருவாக்கியுள்ளது. இந்த சென்சார்களின் மூலம் மிக எளிதாக தகவல்களை பரிமாறி கொள்ள முடியும். கரப்பான் பூச்சிகளின் முதுகில் சென்சாரும் அதன் கூட 20mm x 15mm அளவுக்கு ஒரு ஃப்யூள் செல்லும் இணைக்கப்பட்டிருக்கும்.இந்த ஃப்யூள் செல் வேலை செய்ய, கரப்பான் பூச்சியின் உடலில் ட்ரஹலோஸ் (trehalose) என்னும் திரவம் மற்றும் ஒரு சிறிய ஊசியை செலுத்துவார்கள்.இந்த திரவம் உள்ளே எலக்ட்ரோட்ஸை உருவாக்கும், அதன் மூலம் குளுகோஸ் கிடைக்கும்.இந்த எலக்ட்ரோட்ஸ் மூலம் ஊசி அனோட் /காத்தோடாக மாறி நிரந்திர மின்சாரம் கிடைக்கும், இது சென்சாரின் உபயோகத்திற்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் .இதற்குமுன்புசோதனைசெய்துபார்த்த போது, ஒவ்வொரு கரப்பான் பூச்சியும் 50.2μW மின்சாரத்தை தந்ததாம்.

METAL DEDUCTER

மெட்டல் டிடெக்டர் எவ்வாறு மனித உடலில் உள்ள உலோகத்தை கண்டிபிடிக்கிறது ???

ரயில் நிலையங்களிலும் ,
முக்கியமான சில
அரசு அலுவலகங்களிலும்
நுழைவாயிலுக்குப் பக்கத்தில்
மரத்தால் ஆன
ஒரு சட்டகத்தை ( இது கதவு நிலையைப்
போன்று பெரிதாக இருக்கும்)
வைத்திருப்பார்கள். இதை நீங்கள்
பார்த்திருக்கலாம். இந்த
சட்டகத்திலிருந்து நிறைய ஒயர்கள்

வெளியே செல்லும் .
சட்டகத்தின் மேற்பகுதியில் மெட்டல்
டிடெக்டர்
என்று எழுதப்பட்டிருக்கும் . இந்த
சட்டகத்தின் வழியே செல்பவர்கள்
யாராவது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய
வெடி குண்டுகளையோ , ஆயுதங்களையோ வைத்திருக்கிறார்களா என்பதைக்
கண்டுபிடிப்பதற்காகத்தான் இந்த
ஏற்பாடு. குண்டுகளையோ,
ஆயுதங்களையோ செய்ய
குறிப்பிட்ட அளவு உலோகம்
தேவைதானே? அப்படி ,
உலோகங்களால் செய்யப்பட்ட
ஆயுதங்கள் ஒருவரிடம்
இருக்கின்றனவா என்று இந்தக்
கருவியின் மூலம் சுலபமாகக்
கண்டுபிடித்துவிடுகின்றனர்.

இதனால்தான் இது "மெட்டல்
டிடெக்டர்'
என்று அழைக்கப்படுகிறது .

இதே போன்று, காவல் துறையினர்
தங்கள் கையில் நீள் வட்டவடிவிலான
ஒரு கருவியை வைத்திருப்பார்கள்.
இது மெட்டல் டிடெக்டரின்
இன்னொரு வகை . இந்தக்
கருவி சிறிதாக எளிதில்
எங்குவேண்டுமானாலும்
எடுத்துச் செல்லக்கூடிய வகையில்
இருக்கும். இதை ஒருவரின்
உடலுக்கு அருகிலும், அவர்
வைத்திருக்கும் பைகளின் மீதும்
காட்டுவதன் மூலம் அவரிடம்
அபாயகரமான பொருட்கள் ஏதும்
இருக்கின்றனவா என்று கண்டுபிடிக்கின்றனர்.
பெரிய ஆபத்து எதுவும் ஏற்படாமல்
தடுப்பதற்காகத்தான்
இப்படி முன்னெச்சரிக்கையாக
இருக்கிறார்கள்.

சரி, ஒருவர்
மறைத்து வைத்திருக்கும்
உலோகத்தை ஒரு சிறிய
கருவி எப்படிக் கண்டுபிடிக்கிறது ?
ஒரு காந்தத் துண்டின்
அருகே குண்டூசியையோ ,
ஊக்கையோ கொண்டு சென்றீர்கள்
என்றால் அதைக் காந்தம் ஈர்க்கும் .
பக்கத்தில் வைத்தால், இழுத்து தன்
மீது ஒட்டிக்கொள்ளும் . காந்தத்தின்
சுற்றுப்புறத்தில் உருவாகும்
காந்தப் புலத்தால் இந்த ஈர்ப்புத்
தன்மை உருவாகிறது. இப்படியாக
பெரும்பாலான இரும்புக்
கலப்பு உலோகங்கள் காந்தப் புலத்தின்
அருகே செல்லும்போது , அந்தக்
காந்தப் புலத்தில்
பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன
( காந்தப் புலம் என்பது, காந்தத்தின்
ஈர்ப்பு விசை பரவியிருக்கும்
பரப்பாகும்) .

குளத்தில் கல்லை விட்டெறிந்தால்,
அதன் தொடர் விளைவாக
அலை அலையாக நீர்
பரவுகிறது அல்லவா ? இதைப்
போலத்தான், காந்தமும்
சுற்றுப்புறத்தில் தன்
ஈர்ப்புத்தன்மையை அலை அலையாகப்
பரவவிட்டிருக்கும்.
மெட்டல் டிடெக்டர் எனப்படும்
உலோகத்தைக் கண்டறியும்
கருவிகளில், மின்சாரம் செல்லும்
சர்க்யூட் பாதைகள் மிகவும்
நுட்பமான வகையில்
அமைக்கப்பட்டிருக்கும். காந்தப்
புலங்களில் மிகவும் நுணுக்கமாக
ஏற்படும் பாதிப்புகளைக்கூட
உணர்ந்து எச்சரிக்கை ஒலியெழுப்பும்
வகையில் அந்தக் கருவி தயார்
செய்யப்பட்டிருக்கிறது.
கையடக்கமாக உள்ள மெட்டல்
டிடெக்டரில் "காயில்' எனப்படும்
இரண்டு கம்பிச் சுருள்கள் இருக்கும்.
இவை இரண்டும் ஒரே சக்திகொண்ட
காந்தப் புலங்களை உருவாக்கும்
திறன்கொண்டவை. இந்தக் கருவியின்
அருகே ஒரு உலோகப் பொருள்
வந்தால், ஒரே வகையிலான
ஈர்ப்புத்தன்மையைக் கொண்ட அந்தக்
காந்தப் புலங்களின் சமநிலையில்
பாதிப்பு ஏற்படுகிறது .

அது மின்கம்பிச் சுருளுக்குக்
கடத்தப்பட்டு எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது .
வேறு சில மெட்டல் டிடெக்டர்களில் ,
மின்கம்பிச் சுருள்கள் காந்தப்
புலங்களை உருவாக்குவதற்குப்
பதிலாக , சுற்றுப்புறத்தில் உள்ள
இயற்கையான காந்தப் புலத்தில்
ஏற்படும்
பாதிப்புகளை கண்காணிக்கும்
வகையில்
உருவாக்கப்பட்டிருக்கின்றன .
கதவு நிலை வடிவத்தில் உள்ள
மெட்டல் டிடெக்டர் அப்படித்தான்
செயல்படுகிறது.
அந்தக் கதவு நிலையில்
தொடர்ச்சியான மின்கம்பிச்
சுருள்கள் இருக்கும்.
அவை சுற்றுப்புற காந்த ஈர்ப்பில்
ஏற்படும் மாறுபாடுகளைக்
கவனித்து, அதற்கேற்ப
எச்சரிக்கை ஒலியை எழுப்புகின்றன.
இதைப்போல பூமிக்கு அடியில்
மிகப் பெரிய காந்தப்புலம்
இருக்கிறது . இது வடக்கு -தெற்காக
இருக்கிறது .

இதை உணர்ந்துகொண்டுதான் பல
பறவைகள் வடகில் உள்ள
நாடுகளிலிருந்து தென்னிந்தியாவிற்கு ( பழவேற்காடு ஏரி,
வேடந்தாங்கல் , கோடியக்கரை ,
கூத்தங்குளம் ஆகிய பகுதிகளுக்கு )
குளிர்காலத்தில்
வலசை வருகின்றன.

நன்றி -தினமணி

திங்கள், 17 பிப்ரவரி, 2014

Tamil Student Discovery

தமிழக மாணவரின் கண்டுபிடிப்பு குறித்து அமெரிக்க பல்கலை மாநாட்டில் விவாதம்.

அமெரிக்காவின் லாங்வுட் பல்கலையில் நடந்த அறிவியல் உச்சி மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் டெனித் ஆதித்யாவின் கண்டுபிடிப்புகுறித்து விவாதம் நடந்தது. மாநாட்டாளர்களின் கேள்விகளுக்கு,
அம்மாணவர்,"டெலி கான்பரன்சிங்' மூலமாக விளக்கம் கொடுத்தார். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பிளஸ் 1 மாணவர் டெனித்ஆதித்யா,16. தொடர்ந்து பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வருகிறார் இவர், கடந்த இரண்டு ஆண்டிற்கு முன், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கப், பிளேட், கேரிபேக் போன்றவைகளுக்கு மாற்றாக, வாழை இலையிலான கப், பிளேட், பை போன்றவைகளை தயார் செய்வதற்கு, வாழை இலையை பதப்படுத்தி பல ஆண்டு உபயோகிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். இதற்காக, பல்வேறு மாநில விருதுகளையும், மத்திய அரசின் தங்கப்பதக்கம், விருது பெற்றுள்ளார். தனது கண்டுபிடிப்பிற்காக, காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார். மே மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள சர்வதேச அறிவியல் மாநாட்டில், இந்தியாவிற்கான கண்டுபிடிப்பை சமர்ப்பிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள, லாங்வுட் பல்கலைக்கழகத்தின், ஏழாவது ஆண்டு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் கற்கும் உச்சிமாநாடு நடந்தது. அதன் இயக்குனர் மனோரமா நிகழ்ச்சியை துவக்கினார். கல்வித் துறையின் டீன் பால்சாப்மேன் தலைமை வகித்தார். அமெரிக் காவில் உள்ள கல்வித்துறை நிபுணர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கிராமப்புற மேல்நிலை, துவக்கப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில், முதலாவதாக இந்தியாவின் சார்பில் தமிழக மாணவர் டெனித் ஆதித்யாவின், வாழை இலை பதப்படுத்தும் தொழில்நுட்பம்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இது குறித்து மாநாட்டில் டிஜிட்டல் டிஸ்பிளே போர்டில் அனைவ ருக்கும் விவரித்து காட்டப்பட்டது. மாநாட்டாளர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் டெனித் ஆதித்யா, திருவனந்தபுரத்தில் இருந்து, "டெலிகான்பரன்சிங்' மூலம் பதிலளித்தும், தனது கண்டுபிடிப்பின் பயன்கள் குறித்தும் விவரித்து பேசினார். இதனால் மகிழ்ச்சியடைந்த அவர்கள், அடுத்த உச்சி மாநாட்டின்போது, நேரில் வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர். இவரைப்போல, தூத்துக்குடி மாவட்டம், ஏரல் இன்ஜினியர் ஜாபர்அலியின் "மேத்டிஸ்க்' கணித உபகரணம் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.